Monday, December 22, 2025

 என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வதானால் அதிகாரபூர்வமாகச் செய்யுங்கள்.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்..
ராகவபிரியனின் படைப்புகளைத் தடை செய்தால் அவருக்கு நாளை நோபல் கிடைக்க வழி செய்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..
மிக்க நன்றியும் அன்பும்..
ராகவபிரியன்..



 தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்...4

தன் வாழ்விடக் காட்டிலிருந்து தப்பிய புலி
நள்ளிரவில் மானுடக் குடியிருப்புகளில்
பசியின் வரலாற்றை உறுமியபடி
இரை தேடி அலைகிறது..
உடும்பின் இடுப்பில் நூலேணியைக் கட்டி
கோட்டை மதிலேறிக் குதிக்க வந்த
வரலாற்றுத் திருடன்
புலிக்குப் பயந்து பம்மத் தொடங்குகிறான்..
இரவின் நிசப்தத்தில் ஒலிக்கும்
விதவிதமான பல்குரல் ஒலிகளுக்குப்
பயப்படாத குடுகுடுப்பைக்காரன்
புலிப்பாதை மசானத்தில்
தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை
தோண்டத் தொடங்குகிறான்..
அவனின் குழிபறிக்கும்
மண்வெட்டிச் சப்தத்தில்
திராவிட வரலாறு ஒலிக்கத் தொடங்க
புலியும் உடும்பும் தலைச்சன் பிள்ளைப் பிணமும்
பயந்து நடுங்கத் தொடங்கின..
அந்த நிசப்த
வரலாற்று அருவப் பொழுதுகளில்
எரிந்த கட்சி எரியாத கட்சி
விரசப்பாட்டின் சிற்றிண்பம் துய்க்க
வாடிக்கையாய்ச் செல்லும்
முண்டாசு சுற்றிய பெருந்தலைகள்
பம்மிப்பம்மி பயமின்றி நடக்கும்
பின் நவீன பிந்தைய காலணி காலங்களில்
தங்கள் மனைவிகளை
ஒருபோதும்
உடன் அழைத்துச் செல்வதில்லை..
போகட்டும்..
மானற்ற காடுகளைத் துறந்த புலி
சேவல் கிடைத்தாலும் சமாதானமாகிவிடுவதை
மூடிய மின்சுற்று படக்கருவிகள்
இப்போது
பத்திரமாய் படம்பிடித்துக் காட்டுகின்றன..
கோட்டை மீதேறிக் குதித்த
வரலாற்றுத் திருடன்
பசிதாங்காமல்
குளிர் காய மூட்டிய தீயில்
உடும்பு மாமிசத்தை உருட்டிக்கொண்டே
தேசியத் தணலில் சூடில்லை என
புலம்பித் தீர்க்கிறான்..
நடுநிசியில் வீட்டு வாசலில் நின்ற
குடுகுடுப்பைக் காரன்
குறிசொல்வதை ஒளிந்திருந்து
கேட்டவனுக்கு பாஷை புரியவில்லை..
அந்தக் குடுகுடுப்பையன்
பேசுவது சம்ஸ்கிருதமென்று
அணைத்துக்கொண்டிருந்த
அன்றைய வைப்பாட்டியிடம்
அசடொழுகும் வீரமுடன் சொன்னவன்..
வாசலில் நிழலாடிய
முண்டாசு பிம்பத்தைக் கண்டு
துண்டைக் காணோம்
துணியைக் காணோமென
அம்மணமாய் ஓடத்துவங்குகிறான்..
ராகவபிரியன்



Saturday, December 20, 2025

 தமிழிலக்கிய ஆபரேசன் செந்தூரம்..3.

பாரதி தனது ஐந்து வயதிற்குள்ளாகவே தனது தாயை இழக்கிறான். அவன் மீது தாயன்பு காட்டும் அத்துனை பொருட்களிடமும் அதாவது மானுடம் இயற்கை பறப்பன ஊர்வன அனைத்திலும் தன் தாயைப் பார்க்கிறான்..
இங்கே ஈடிபஸ் காம்ளெக்ஸ் என எதிர்வினையாற்றுபவர்கள் பாரதி சிறுவயதில் பிராமணரல்லாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார் அதுவும் எட்டு அல்லது ஒன்பது வயதில் என பதிவு செய்கிறார்கள்.. இது மிகவும் கண்டிக்கத்தக்க கீழ்த்தரமான உள்நோக்கம் கொண்ட பிராமண வெறுப்பை விதைக்கும் பதிவு..
பாரதியின் சுயசரிதையில் பாரதி இப்படிச் சொல்கிறார்..
ஆங்கோர் கன்னியை பத்துபிராயத்தில்
ஆழ நெஞ்சிடை ஊன்றி வணங்கினேன்..
பாரதி வணங்கியது சிறுவயதிலிருந்தே தன் தாயாக பாவித்த அந்த ஆதிபராசக்தியைத் தான் என்பதை கவிஞர் மீரா தொகுத்த பாரதீயம் என்ற கட்டுரை தொகுப்பில் திரு டாக்டர். சி. கனகசபாபதியின் கட்டுரையில் காண இயலும்..
பாரதியின் சமகால சினிமா படத்திலும் இதுபோன்ற பிராமண வெறுப்பு காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது..அதற்கு பாரதியின் வேறு தலைப்பிலுள்ள பாடலுக்கு இளையராஜா இசைவேறு அமைத்திருக்கிறார்.. இது இன்றைய அதீஸ்ட் இடதுசாரி பிராமண வெறுப்பு இலக்கிய கர்த்தாக்களின் துணையோடு நடந்தேறியிருக்கிறது..
மேலைத்தேய இலக்கியத்தின் ஜூலியோ கொர்தாஸரின் ஒரு கதை நினைவிற்கு வருகிறது...அவர் பிரான்சில் ஒரு மிருககாட்சி சாலைக்குச் செல்கிறார்..அங்கே நிறைய கொடிய மிருகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன..
நம் தமிழ் நாட்டில் சமகாலத்து இளைஞர்கள் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் காட்சிப்படுத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கு போவது போல் தான். கொர்தாஸர் சிங்கம் புலி மற்றும் இதர மிருகங்களைப் பார்த்துவிட்டு மெல்ல ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து பின் கடந்து சென்றுவிடுகிறார்..
தமிழகத்தின் அரசியல் கூட்டத்திற்கு வரும் வெகுஜனங்களுக்கு ஆயிரம் உரூபாயும் குவார்ட்டரும் மற்றும் ஒரு ஊறுகாய் பொட்டலுமும் கொடுக்கப்படுவதாக அறிய இயலும்..அப்படி அழைத்து வரும் வாக்காள பெருமக்கள்..சிலர்...கூட்டம் முடியும் வரை அருகிருக்கும் புதர் மறைவில் ஒருவித பயத்துடன் தாகம் தீர்த்தபடி கலந்து கொண்டுவிட்டு செல்வார்கள்..
அதுபோல நம் தமிழக சாதாரண வெகுமக்கள் போல அரசியலியக்கப் பார்வையுடன் கொர்தாஸர் நகர்ந்து செல்ல மாட்டார்.. அவர் எப்படி செல்வாரென்றால்...முடிந்தால் ஒரு வாழைத்தாரோ இளனீர் கொத்தோ தள்ளாடாமல் இருந்தால் ஈச்சம் கொத்தோகூட எடுத்துக்கொண்டு செல்லும் நம் இன்றைய தலைமுறையின் வெகுமக்கள் வாழ்வியலுக்கேற்ப.. தன் இதயம் முழுவதும் தான் கண்ட அம்மிருக இயல்புகளை உள்வாங்கியபடி எங்காவது தனக்கான அன்பு கிடைக்கிறதாவென தேடியபடியே செல்வார் கொர்தாஸர்..
மெல்ல நகர்ந்து ஆகப்பெரிய கண்ணாடித் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்வாழ் சிறைபட்ட உயிரினங்களை காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் நிற்கிறார்...அந்த கண்ணாடிச் சிறைக்குள்ளே ஒரு அச்சலோற்றல் மீன் அதாவது மீனின் முட்டைப்புழு ஒன்று நீந்திக்கொண்டு அவரை நோக்கி வருகிறது..
கொர்தாஸர் கண்ணாடியின் வெளிப்பக்கம் அச்சிறும் அக்குழந்தை மீனுக்கு முத்தமிடுகிறார்...அந்த சின்ஞ்சிறிய அச்சலோற்றலும் தன் சிறுவாய் தொட்டு அப்பக்கமிருந்து முத்தமிடுகிறது..அன்பின் காந்தம் அவரை தினமும் அவ்விடம் இழுத்து வருகிறது.. அந்த மீனின் அன்பு தினம் தினம் கொர்தாஸரி அந்த கண்ணாடித் தொட்டியை முத்தமிடச் செய்துவிடுகிறது..
பாரதி அவரின் அப்பாவின் அடக்குமுறைக்கும் வெறுப்பிற்கும் ஆளாகி தாயன்பற்ற நிலையில் தன் சிறுவயதில் தனிமைப்படுத்தப்படுகிறார்..அவர் தான் காணும் பெண்களையெல்லாம் பராசக்தியாக நினைத்துப் பாடிச்சென்ற குழந்தைக் கவிப்பிதாமகன்...அப்படியான அழிக்கவியலா இலக்கிய ஜீவித வரலாற்றுக்குச் சொந்தக்காரன் நம் மஹாகவி..
பிராமண சாதியை கலப்புத் திருமணம் செய்தால் ஒழித்துவிடலாம் என கனவுகண்டு சமகால இளைஞர்களை தவறாக வழி நடத்தும் நம்தமிழ் அதீஸ்ட்களின் மதமாற்ற சாதிமாற்ற உத்திக்கு உலக மஹாகவி பாரதியின் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் குற்ற எழுத்து இலக்கிய குப்பைகளை கொட்டிவிட்டுப் போகிறார்கள் சிலர்.. இதுபோன்ற சிறுமதியாளர்களை ஒருபோதும் வரலாறு மன்னிக்காது..
போகட்டும்..
பாரதிக்கு மட்டுமல்ல மாபெரும் மேலைத்தேய இலக்கிய கர்த்தர்..கொர்தாஸருக்கும் இதே கதிதான் இலக்கிய வரலாற்றில் நடந்தேறியிருக்கிறது... கொர்தாஸர் உடல் நிலை சரியில்லாத அவரின் கடைசீ காலத்தில் அவருக்கு மாற்று இரத்தம் செலுத்தப்படுகிறது..அந்தக் குருதியில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்திருக்கின்றன. அவர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என அவரின் ஒழுக்கத்தைச் சந்தேகித்து சிதைத்த இலக்கியச் செய்திகள் இன்னமும் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
பாரதி அரங்கனை [ கண்ணனைத்தான்] காதலித்தான்..தன் மனைவி செல்லம்மாளைத் தவிர அவன் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் என்பதை செல்லம்மாவே பதிவு செய்திருக்கிறார்..பாரதி பராசக்தியை தன்னை வளர்த்த அன்னையாகவே பாவித்தான்..பாரதி வேறுசாதிப் பெண்ணை எட்டுவயதில் காதலித்தான் என துர் நோக்கத்துடன் எழுதுபவர்களுக்கும் கோவில் பொம்மைகளின் நிர்வாணத்தை கூர்ந்து நோக்கி சுகம் கண்டு கொண்டே ஆன்மீகம் ஆபாசம் நிறைந்ததென எழுதுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
பாரதியை மட்டுமல்ல இலக்கியத்தையும் அதன் மூலம் வெகுமக்களின் வாழ்க்கையை எழுதுவதற்கும்..இன்றைய திருட்டு அரசியலையும் அதனால் பாதிக்கப்பட்டு பதிவுசெய்யப்படும் இலக்கியத்தை...? எழுதுவதற்கும் குறைந்த பட்சம் ஆறு இல்லை ஓராயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன..
ஒரு அரசியல் கட்சி கூட்டத்திற்கு வருவோரின் ஒவ்வொருவரின் தலைக்கும் ஆயிரம் தரும்..இன்னொன்று ஐநூறு..இன்னொன்று இருநூறு.. இதையெல்லாம் எதிர்பார்த்து அச்சலோற்றல் முத்தம் தரும் வசீகர சினிமா நடிக கட்சிக்காக கண்ணாடித் தொட்டியின் வெளிப்புற பறக்கும் முத்தம் பெறுவதற்காக உயர்விளக்கு கோபுர கம்பத்தில் ஏறி நின்று கூச்சலிட்டால் பாரதி இடதுசாரியாகிவிடமாட்டார்... அதீஸ்ட் இலக்கியத்திற்குள் அவரை அடைக்க முற்படுவோருக்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.. உங்களால் எந்த சாரிக்குள்ளும் பாரதியின் முண்டாசின் நுனியைக்கூட திணிக்க இயலாது...
ராகவபிரியன்..



Friday, December 19, 2025

 தமிழிலக்கிய ஆப்பரேசன் செந்தூரம்...2

பாரதியின் பாட்டிற்கு முருகனே நேரில் வந்ததாக தமிழ்த் தென்றல் திரு.வி.க வே சொல்லியிருக்கிறார்...
பாரதி புதுவையில் கனகலிங்கத்திற்கு பூணுல் அணிவித்ததால் அவர் இடதுசாரி எனவும் இன்றைய அதீஸ்ட்களின் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடிக்க பாரதியை மேற்கோள் காட்டும் இலக்கிய வன்மத்தை
இப்போது பூர்ண சந்திர தீபக்கனலாக கக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
இந்த கடவுள் மறுப்பு அரசாங்கத்திற்கு ஜால்ரா தட்டும் இடதுசாரி அதீஸ்ட் இலக்கிய கர்த்தாக்கள் உலக மஹாகவியின் ஆன்மீக தேசீய சிந்தனைகளை சுருக்கி சுருக்குப்பைக்குள் வைத்து இடுப்பில் செருக்கிகொண்டு விட்டதாக எழுதுவதால் பாரதியின் முண்டாசின் வண்ணம் ஒரு போதும் மங்கிவிடாது..
உங்கள் பொய் இலக்கிய குப்பைகளோடு இந்த இந்து எதிர்ப்பு அரசும் நாளை பரம்குன்றத்தின் தீபத் தூணில் எரியும் அக்னியில் நெய்யாக வார்க்கப்படப்போவது நிஜம்..
பாரதியே சொல்கிறார்...அடியார் பலரிங்குளரே
அவரை [ இந்த பெரியாரிஸ்ட் ஆட்சியின் பிடியிலிருந்து 2026லாவது] விடுவித்தருள்வாய்...என...
அப்போது இந்தப் பாட்டை நாட்டைக் குறிஞ்சியில் தமிழ் நாடே பாடப்போவது நிஜம்..
ராகவபிரியன்
ஒரு சோற்று இலக்கியப் பருக்கையை உங்கள் விரல்களில் வைக்கிறேன்.. பதம் பார்த்துவிட்டேன்.. உங்கள் விரல்களில் சுட்டுக்கொள்ளாதீர்கள்..
கீழே இருக்கும் செய்தி வேர்ட் ப்ரெஸ். காம் இல் இருக்கிறது..
ஆசிரியர் : பாரதியார்
ஒருசமயம் சென்னையில் நடந்த ஆன்மிக சபை ஒன்றில் முருகனின் திருவுருமுன் நின்று தமது கம்பீரக் குரலில் தமக்கே உரித்தான துள்ளல் நடையில், வள்ளல் முருகனை வா… வா… என்று கூறிப் பாடினார், பாரதியார். அவர் பாடப்பாட அங்கிருந்த படத்தில் இருந்து முருகன் அருவுருவ வடிவாக மெதுவாக இறங்கி வந்து அவரருகே நின்று கேட்டு மகிழ்ந்தான்.
இதனை அங்கிருந்த யாவருமே கண்டு சிலிர்த்துப் போனார்கள். இந்த அற்புத அனுபவத்தை நேரடியாகப் பெற்றவர்களுள் ஒருவரான வெ. சாமிநாத சர்மா ஒரு நூலில் அப்படியே முருகன் நேரில் வந்து நின்றான் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தாமும் கண்டதாகவும் சாமிநாத சர்மா அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் உண்மையே எனவும் தமது நூல் ஒன்றில் முன் மொழிந்திருக்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்.
மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை வரச்செய்து நேரில் கண்ட துதி
முருகா முருகா!
ராகம்-நாட்டைக்குறிஞ்சி
தாளம்-ஆதி
Click the link to listen to “முருகா முருகா” sung by Smt. Sudha Ragunathan.
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1.
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2.
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3.
சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4.
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5.
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6.
குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)



 இன்றைய விஜய்யின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. அது மட்டுமல்ல ஐஆர்எஸ் படித்தும் அதிகாரப் பசி போதாமையால் நடிகர் கூட்டத்தைக் கண்டு மேலதிக அதிகாரம் தின்ன நினைத்து சேர்ந்திருக்கும் திரு அருள்ராஜ் அவர்களின் உரை மிக மிக அபத்தமாக இருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு முன்பு வரை அதாவது பாண்டி கூட்டம் வரை விஜயின் பேச்சிலும் அவரைத் தவறாக வழி நடத்தும் நிர்வாகிகளின் பேச்சிலும் இவ்வளவு ஆணவம் தெறிக்கவில்லை...இப்போது மட்டும் ஏன் எனப் புரியவில்லை..
செங்கோட்டையன் அரசியல் பழிவாங்க சேராத இடம் சேர்ந்திருக்கிறாரோ எனும் சந்தேகம் ஊர்ஜிதமாவது போல் புரிந்துகொள்ள முடிகிறது..செங்கோல் என்பது நீதி வழுவாத ஆட்சியின் அடையாளம் எனும் குறியிடு இப்போது உங்களுக்கு நாங்கள் நிரந்தர அடிமைகள் எனக் காட்டும் அடையாளமாகி நீண்ட காலங்கள் ஆகிவிட்டன..
எம்ஜியாரும் விஜயகாந்தும் அரசியலுக்கு வருவதற்கு முன்னும் கூட அவர்களைத் தேடி வந்தவர்கள் அத்துனை பேருக்கும்உணவளித்தவர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல்..ஆனால் விஜய்யைக் காணக் கூடும் கூட்டம் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்காமல் சுருண்டு விழுவதை எங்கு போய் சொல்வது..
சினிமா வருமாணம் ஆண்டிற்கு 500 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறார் விஜய்.. யாரோ அரசியலுக்கு வந்தால் ஆண்டிற்கு 500000 கோடி வருமாணம் வருமெனச் சொல்லி தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்...
விஜய்யைக் காண அவர் வீட்டின் முன் கூடியிருக்கும் கூட்டத்திற்கு ஒரு வேளை உணவு கூட வேண்டாம் ஒரு தம்டீ கேண் வைக்க வேண்டாம் ஒரு மினரல் தண்ணிர் டேங்காவது வைத்திருக்கிறாரா...? அரசியலுக்கு வந்த பிறகாவது..
கடும் பஞ்சத்தில் மதுரை மக்களுக்கு தன் சொத்துக்களை விற்று 13 மாதங்கள் உணவளித்து ஆங்கில ஆட்சியையே மிரளவைத்த குஞ்சரத்தம்மாள் இவர்களின் கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாதது விஜய்க்குத் தெரியவில்லை...போலும்...அல்லது அவரை வழி நடத்துவோருக்காவது தெரியுமா எனவும் புரியவில்லை...
விஜய்க்கு நல்ல வழிகாட்டிகளே கிடைக்கவில்லை என்பது நாஞ்சில் சம்பத் சேர்ந்த போதே தமிழக மக்களுக்குப் புரிந்துவிட்டது. விஜய்க்கு மட்டும் இன்னமும் புரியவே இல்லை என்பது பாண்டியில் ரேஷன் கடைகள் இல்லை எனும் அவரின் கூற்றில் உலகத் தமிழ் மக்களுக்குப் புரிந்துவிட்டது..
2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக மற்றும் பாண்டிச்சேரி மக்கள் அவருக்கு ஒரு சரியான வழியை காட்டுவார்கள்..என்பது மட்டும் நிதர்சனமாகப் புரிகிறது..
ராகவபிரியன்



 இது பாரதி நூற்றாண்டு விழாவில் டிச1982 ல் உங்கள் ராகவபிரியன்...பாரதியின் நண்பர் கவியோகி சுத்தானந்த பாரதியின் முன் தன் கவிதையை படித்துக்காட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க படம்..கீழே அமர்ந்திருப்பவர்..ஒருங்கிணைப்பாளர் இளசை அருணா அவர்கள்..



 சில காட்டுப்பூனைகள் கண்களை மூடிக்கொண்டதும் உலகம் இருளில் மூழ்கிவிடுவதாக கற்பித்துக்கொல்லும் போதில் சில வெளிச்சங்களை எலிகளின் மீது பாய்ச்ச வேண்டியிருக்கிறது...எழுபதுகளின் இறுதியில் என்பதுகளின் தொடக்கத்தில் நானும் கட்டுமானத் தொழில் இதழின் இன்றைய ஆசிரியர் சிந்து பாஸ்கரும்[விஜய பாஸ்கர்] மறைந்த மரியாதைக்குரிய சரவணத்தமிழன் அவர்களின் ஆசியோடு நடத்திக்கொண்டிருந்த கையெழுத்துப்பத்திரிகை உதயம்..அதன் பின் அட்டை...சிந்து பாஸ்கரின் அன்றைய ஓவியம் எனது கவிதைக்கு...இப்போது பூனைகளின் கண்திறப்பதற்காக....அப்போதைய பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அனுப்பிய சிறுகதையைப்பற்றிய செய்தியில் உதயத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனது தலையங்கத்தில்...அன்பன்..ராகவபிரியன்



  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...